சில மாதங்களுக்கு முன்பு நான் பயின்ற மேல்நிலை பள்ளி அமைந்துள்ள பரந்தூர் கிராமத்திலிருந்து என் கிராமத்திற்கு நடந்து செல்ல நேர்ந்தது. பள்ளி சிறுவனாக நான் தினமும் நடந்து சென்ற அப்பாதையில், இயற்கை என் கண் முன் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்களும், சமுதாய தாக்கமும், என் சிந்தைக்கு வேலை கொடுத்தது. வேல மரங்கள் படர்ந்த பரந்தூர் ஏரி கரையோர சாலையில் அச்சிறு நடை பயணம் துவங்கியது. இடது புறம் நீர் நிறைந்த ஏரியின் கரையுமாய், வலது புறம் பசுமையான விளை நிலங்களுமாய் என் பிஞ்சு வயது விழிகளுக்கு விருந்தளித்த அவ்விடம் நேர் மாறாக வற்றிய எரியாய், நீரின்றி விவசாயம் மறந்த நிலங்களாய் காட்சி அளித்தன. நாள் முழுதும் மேய்ந்து களைப்பான மாடுகளை ஒட்டிக்கொண்டு வீடு திரும்பும் மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.
வழியில் பரந்தூர் எரி கலங்கள் தரை பலத்தை அடைந்தேன். என் பள்ளி வயது மழை காலங்களில், பாலத்தின் மேல் ஐந்து அடி வரை செல்லும் எரி வெள்ளமோ, துள்ளி குதிக்கும் கெண்டை மீன்களோ, மழையினால் விடுமுறை ஆகிப்போன பள்ளியிலிருந்து மீன் பிடிக்க வரும் மாணவர்களோ அங்கு காணவில்லை. அது போன்ற ஒரு காலத்தில் தான் என் நண்பர்கள் குழுவுடன் ஆடைகள் களைந்து எரி மதகில் குளித்து`விட்டு, மீன் பிடித்து மகிழ்ந்தோம், அன்று தானே அங்கு வந்த என் ராமன் பெரியப்பா எங்கள் ஆடைகளை எடுத்து சென்று என் வீட்டில் சொல்லிவிட்டார். பிறகு நாங்கள் அனைவரும் பிடித்த மீன்களுடன், ஆடைகளின்றி, சாலை வழிக்கு பதிலாக பசும் வயல்களின் வழியாக அனைவரும் அவரவர் வீட்டின் பின்புறத்தை சென்றடைந்தோம். இந்த நிகழ்வு நடந்தும், அது போன்றதொரு வெள்ளத்தை பார்த்தும் பத்து வருடத்திற்க்கு மேல் இருந்த போதிலும் நினைவுகள் என்னை நீங்காதது நிதர்சனம் தானே?
தரை பாலத்தை கடந்து என் கிராமத்தை நெருங்கி கொண்டிருந்தேன். சாலையின் இருமருங்கிலும் சீராக நிழல் தந்து கொண்டிருக்கும் புளியமரங்களை பார்த்துக்கொண்டு என் நடையை தொடர்ந்தேன். அதோ என் கண்ணில் அந்த இனிப்பு புளியம்பழ மரம் தென்பட்டது, ஆனால் முன்னர் போல் புளியம் பழம் பறித்து கொண்டிருக்கும் சிறுவர்கள் யாரும் இல்லை. வழியில் எதிரே வந்த என் பள்ளி தோழன் முத்துவிடம் நலம் விசாரித்து வணக்கத்துடன் விடை பெற்று தொடர்ந்தேன். மாடு மேய்ப்பது, விவசாயக் கூலி என உள்ளூரில் பல முயற்சி செய்து பலனின்றி இப்போது முத்து தினக்கூலியாக பக்கத்துக்கு நகரத்துக்கு சென்று வருகிறான். மிக இளம் வயதிலேயே திருமணம் முடித்த அவனுக்கு இப்போது பள்ளி படிக்கும் இரு குழந்தைகள். குழந்தைகள் பக்கத்து நகரத்தில் உள்ள ஆங்கில பள்ளியில் நன்றாக படிப்பதாக அவன் சொல்ல கேட்டேன். விவசாயத்தில் வருமானம் குறைந்து விட்டதால் நகரத்திற்கு கூலியாக செல்வதாகவும், வரவுக்கு செலவு சரியாக இருப்பதாக கூறினான்.
கண்ணன் மாமாவின் கிணற்றையும், கோட்டைசாமி மாமாவின் கிணற்றையும் கடந்து என் கிராமத்திற்கு மிக அருகில் நடந்து கொண்டிருந்தேன். இந்த கிணறுகளில் தானே நான் நீச்சல் பழகினேன். தினமும் பள்ளி செல்லும் முன்பும், பள்ளி விட்டு வந்த பின்பும் நடந்த எரி குளியல்கள், கிணற்று குளியல்கள் நினைவுகளினால் என் நெஞ்சை ஈரமாகியது. இப்பொழுது கண்ணன் மாமாவின் கிணறு வற்றியிருந்தது, கோட்டைசாமி மாமாவின் கிணறு துந்து போய் பாழடைந்து இருந்தது. ஊர் முழுதும் கிணறுகள் வற்றி போய் நிலக்கிழார்கள் ஆழ்துளை கிணறுகளுக்கு மாறியிருந்தார்கள். அரை மணிநேர நடைக்கு பின் எங்கள் தெருவை அடைந்தேன். தெருவில் நொண்டி ஆட்டம் ஆடும் சுட்டிகளோ, கோலி விளையாடும் வாண்டுகளோ, வீட்டு திண்ணைகளில் பல்லாங்குழி, தாயம் ஆடும் பெண்களோ யாரும் இல்லை.
"மாமா எப்போ வாந்தீங்க?" கேட்டு கொண்டே வந்தான் என் மச்சான் வந்த விவரத்தை சொல்லிவிட்டு அவனிடம் நலம் விசாரித்தேன். "நல்ல இருக்கேன் மாமா. டென் ஸ்போர்ட்ஸ் ல ஜான் சீனா புரோக்ராம்க்கு டைம் ஆச்சு அப்பறம் வீட்டுக்கு வரேன்" என்று சொல்லிவிட்டு பறந்தான். வீட்டிற்கு சென்ற உணவு அருந்திவிட்டு அப்பாவிடம் சிறு விவாதம் நடந்தது. நிலத்தில் நடவு நட கூலி அதிகமாகிவிட்டதாகவும் சென்ற வெள்ளாமையில் நட்டமாகி விட்டத்தால் என் சம்பளத்தில் இருந்து ருபாய் ஐயாயிரம் கேட்டதால் வந்த விவாதம் தான் அது. என் கைபேசி வந்திருக்கும் குறுஞ்செய்திக்காக அலறியது. தகவல் தொழில்நுட்ப பொறியாளனான எனக்கு, என் மேலாளரிடம் இருந்து வந்த செய்தியில் அடுத்த வெள்ளி கிழமைக்குள் புதிதாக கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அம்மாவிடம் காலை சீக்கிரம் எழுப்ப சொல்லி விட்டு உறங்கி போனேன்.
கனவுப்பாதையில்,
வந்தியதேவன்